000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கூர்மவதாரம் |
300 | : | _ _ |a வைணவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a பாற்கடல் கடையும் பொழுது ஆமை வடிவெடுத்த விஷ்ணு மந்தர மலையைத் தாங்குதல் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடையும் பொழுது திருமால் ஆமையாய் வடிவெடுத்து மந்தர மலையைத் தாங்குகிறார். திருமாலின் முழங்கால் வரையிலான உருவம் காட்டப்பட்டுள்ளது. அதற்குக் கீழே மலையைத் தாங்கும் ஆமை வடிவம் காட்டப்பட்டுள்ளது. விஷ்ணு நான்கு திருக்கைகளில் பின்னிரு கைகளை இடையில் வைத்தவாறு சமபாதத்தில் நிற்கிறார். முன் கைகளில் அமிர்த கலசத்தை தாங்கியுள்ளார். கலசம் சிதைந்துள்ளது. கிரீட மகுடம் அணிந்து, நீள் காதுகளில் மகரகுண்டலங்கள் அணிந்துள்ளார். விஷ்ணுவின் அருகில் அறுவர் பறந்த நிலையில் கைகளை உயர்த்தி வாழ்த்தொலிக்கின்றனர். தாமரை மொட்டிலிருந்து ஆமை வெளிவருகின்றது. இக்காட்சியின் கீழே சன, சனத்குமார, சனக முனிவர்கள் நால்வரும் பக்கத்திற்கு இருவராக கால்களை குறுக்காக மடித்து அமர்ந்து (ஸ்வஸ்திகாசனம்) உள்ளனர். ஒருவரின் முற்றிலும் சிதைந்துள்ளது. நீள் காதுகள் கொண்டுள்ளனர். முனிவர்களுக்கேயுரிய ஜடாபாரம் தலையில் அணி செய்கிறது. கழுத்தில் கண்டிகை, சரப்பளியும், கால்களில் தண்டையும் அணிந்துள்ளனர். முகம் சிதைந்த முனிவர் இடது கையை உயர்த்தி போற்றுகிறார். |
653 | : | _ _ |a கூர்மாவதாரம், ஆமை வடிவம், விஷ்ணு, பெருமாள், திருமால், வைகுந்த நாதர், வைகுண்டப் பெருமாள், வைகுண்ட பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், இரண்டாம் நந்திவர்மன், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், பல்லவர் கலைகள், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் சிற்பங்கள், விஷ்ணு சிற்பங்கள், பெருமாள் சிற்பங்கள், திருமால் சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.83711742 |
915 | : | _ _ |a 79.71008599 |
995 | : | _ _ |a TVA_SCL_000101 |
barcode | : | TVA_SCL_000101 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |